வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்த பணிகளை செய்ய இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
இந்நிலையில் சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலாங்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் வாக்குச் சாவடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாமினை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் ECR.P.சரவணன், G.தனசேகர், C.சரத், M.கலீல், அனீஸ், கதிர், காதர், நாராயணன், சக்தி, வழக்கறிஞர் பிரேம், மணி, சுபாஷ், அப்பு மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.