உலகமே எதிர்பார்த்து காத்திருந்து அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் 270 வாக்குகள் பெற்று ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். கமலா ஹாரிஸ் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தீர்மானிக்கும் ஏழு மாகாணங்களில், வடக்கு கரோலினா மற்றும் ஜார்ஜியா ஆகிய இரண்டு மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.