74
ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (3-12-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.