166
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 90 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.