சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது : “எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ, ஈ.டபிள்யூ.எஸ். (EWS) கொண்டு வருகிறார்களோ, அது திமுகவாக இருந்தாலும் சரி. நான் அவர்களுக்காக பரப்புரை செய்வேன். ஆனால் எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.
நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது, அயோக்கியத்தனமான செயல்.
பாஜக மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று கூறினார்கள். ஆனால் அவர் அரசியலுக்கே தகுதி இல்லை. தற்போது படிக்க சென்றுள்ள அவர் அறிக்கையை மட்டும் வெளியிட்டு வருகிறார்.
தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். பாஜகவில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது.
நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல். பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என தெரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது தவறு”. இவ்வாறு அவர் கூறினார்.