தனுஷ் மற்றும் நயன்தாரா மோதல் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஆவணப்படமாக நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளது. நயன்தாராவின் திருமண ஆவணப்படம் 18 ஆம் தேதி வெளியாகின்றது. இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் சுமார் 3 வினாடிக்கு வந்தது. இதற்காக தனுஷ் காபி ரைட்ஸுக்காக பத்து கோடி கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியான நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனுஷை காட்டமாக பேசியுள்ளார்.
தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே என்ன பிரச்சனை ?
2015ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் சொன்ன தேதிக்குள் முடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சொன்ன பட்ஜெட்டை விட பத்து கோடி அதிகமாக செலவானதாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் சேர்ந்து தான் தனுஷை கோபத்திற்கு ஆளாகியிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா
2016 ஆம் ஆண்டு நடைபெற ஒரு விருது விழாவில் ‘நானும் ரவுடி தான்’ படத்திற்காக நயன்தாராவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய நயன்தாரா, நானும் ரவுடி தான் படத்தில் என்னுடைய நடிப்பு தனுஷிற்கு பிடிக்கவில்லை. அதனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பேசியிருந்தார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.