சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.
அமரன் படத்தில் சாய் பல்லவி, ஒரு துண்டு சீட்டில் தனது செல்போன் எண்ணை எழுதி, சிவகார்த்தியேகனிடம் வீசுவார். இதை பார்த்த ரசிகர்கள் அது சாய் பல்லவி நம்பர் என்று நினைத்து கொண்டு, அந்த நம்பருக்கு பலரும் அழைப்பு விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றல் அந்த செல்போன் எண்ணை சென்னையை சேர்ந்த என்ஜினீயர் மாணவர் வி.வி. வாகீசன் என்பவர் வைத்துள்ளார். இதனால் தினமும் 100-க்கும் அதிகமான போன்கள் தனக்கு வந்து கொண்டேயிருப்பதாக வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், அடிக்கடி போன் வருவதால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தான் இந்த செல்போன் எண்ணை 2 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருப்பதாகவும், வங்கி கணக்கு, ஆதார் என எல்லாவற்றிற்கும் இந்த செல்போன் நம்பரை தான் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனவே தனக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அமரன் பட நிறுவனத்திடம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை தொடர்ந்து வரும் கால்களால் மன வேதனை அடைந்திருப்பதாகவும் வாகீசன் கூறியுள்ளார்.