32
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
வயநாடு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று அவர் வயநாடு தொகுதி எம்பியாக பதிவியேற்றார். பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.