18
நடிகை கஸ்தூரி பேசியது மிகப் பெரிய தவறு. ஏனென்றால் எனக்கு என்ன வேனும் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை கை காட்டி பல விஷயங்களை பேசுவது தவறு என நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் : தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கவில்லை; மாறாக பாஜகவில்தான் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது. அதனால் நான் பாஜகவில் இருந்து நேற்றே விலகி வந்துவிட்டேன். பத்து வருடம் பாஜகவில் இருந்து பட்டபாடு போதும்.
பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுகவிற்கு பிரசாரம் செய்வேன். பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண். தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது. இவ்வாறு அவர் கூறினார்.