10
நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் நேற்று மாலை காலமானார். இந்த தகவலை தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.