3
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’ இப்படம் 2024ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்றாகும். இதில் திஷா பாட்னி, பாபி தியோல் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
இந்த செய்தி திரையுலகினருக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.