நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் “நானும் ரௌடி தான்” படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட 3 நொடி காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த “நானும் ரௌடி தான்” காட்சிக்காக ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், சினிமாத்துறையில் பிரபலமாக இருக்கும் நடிகை பார்வதி, அனுபமா, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதி ஹாசன், நஸ்ரியா போன்ற முக்கிய நடிகைகள் நயன்தாரா பதிவிட்ட கருத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகைகளுள் பலர் நடிகர் தனுஷுடன் வெவ்வேறு படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.