47
தவெக தலைவர் விஜய்க்கு உதவி செய்யும் எண்ணத்தை பாராட்டலாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “விஜயால் களத்தில் நிற்க முடியவில்லை. விஜய் களத்தில் இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க அதிகமான கூட்டம் வந்துவிடும். அதனால் விஜயால் களத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம்.
மாநில அரசுகள் கொடுக்கும் நிதி தான் மத்திய அரசுக்கு வருவாய். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி கொடுக்க மறுக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கைகள் மழைநீரில் ஆழமாக மூழ்கிவிட்டன”. இவ்வாறு அவர் கூறினார்.