நடிகர் தனுஷ்க்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கைதான் கடந்த மூன்று நாட்களாக தமிழ் திரையுலகின் பேசுபொருளாக உள்ளது. அந்தக் கடிதத்தில் தனது திருமண ஆவணப்படத்தை வெளியிட நடிகர் தனுஷ் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்தார் என தனது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனுஷ்க்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், “தனுஷினால் இன்னல்களைச் சந்தித்தவர் நயன்தாரா மட்டும் இல்லை. நயன்தாராவுக்கு இப்போது ஆதரவு தெரிவித்துள்ள பல நடிகைகளுக்கு இதுபோன்ற தொல்லையை தனுஷ் கொடுத்துள்ளார்.
தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளுக்கும் இதுபோன்ற தொல்லைகளை தனுஷ் கொடுத்துள்ளார். சில நடிகைகளுக்கு அவர்களின் இமேஜினை டேமேஜ் செய்யும்படி தனுஷ் நடந்து கொள்வார். தனுஷ் ஒரு சைக்கோ என்பதால் எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார். என சுசித்ரா காட்டமாகக் கூறியுள்ளார்.
தனுஷ் – நயன் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் பாடகி சுசித்ராவின் பேட்டி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.