நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது ஏன் என சீமான் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அவர் படப்பிடிப்பு என பிஸியாக இருந்ததார். இதனால் இந்த சந்திப்பு தாமதமானது.
ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன். அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியாது. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான். அரசியல் என்பது மிக கொடூரமான ஆட்டம் என்று ரஜினி காந்த் மற்றும் கமலிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்.
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காக தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. சங்கி என்றால் நண்பன் என அர்த்தம். திமுகவை எதிர்த்தாலே சங்கி என்பதா? அப்படியென்றால் சங்கி என்பதில் பெருமைதான் என சீமான் கூறியுள்ளார்.